மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (62). இவர் திருவாவடுதுறை ஆதினத்தில் கணக்காளராக பணிபுரிகிறார்.
வீட்டில் கொள்ளை
திருக்கோடிக்காவல் கிராமத்தில் இவரது தாயார் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு (ஜூலை. 24) ராஜேந்திரன் தாயாரை பார்ப்பதற்காக தனது மனைவியை அழைத்துக்கொண்டு சென்றார்.
இன்று (ஜூலை. 25) அதிகாலை மீண்டும் தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குத்தாலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர்.