நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பட்டமங்கலத் தெரு, மகாதானத் தெரு போன்ற பல தெருக்களில் வசித்த ஏராளமானோர் சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் பணி நிமித்தமாக சென்று அங்கேயே குடிபெயர்ந்துவிட்டனர். இதனால் மயிலாடுதுறையில் அவர்கள் வசித்த வீடுகள் பராமரிப்பின்றி பூட்டியே கிடந்தன.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி கடந்த நான்கு மாதங்களாக அங்கு வசித்து வருகின்றனர். மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து தற்போது அதிகமாக உள்ளதால் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் குதூகலத்துடன் குளித்து மகிழ்கின்றனர்.