மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா, மேலபரசலூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பாலகுரு(40). இவரது மனைவி சுகுணா. இந்த தம்பதிக்கு அஸ்வின்(4), மித்ரன்(2) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
15 அடி ஆழக் குழியில் தவறி விழுந்து சிறுவன் பலி! - தண்ணீர் தேக்கி வைக்கப்பட்ட குழியில் சிறுவன் தவறி விழுந்து பலி
மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே கட்டுமானப் பணிக்காக, தண்ணீர் தேக்கி வைக்க தோண்டப்பட்ட குழியில், சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![15 அடி ஆழக் குழியில் தவறி விழுந்து சிறுவன் பலி! die](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11897387-843-11897387-1621957294084.jpg)
பாலகுரு வீட்டின் அருகே, செந்தில் குமார் என்பவர் வீடு கட்டி வருகிறார். இந்தக் கட்டுமானப்பணிக்காக, 15 அடி ஆழத்தில் குழி தோண்டி, அதில் தண்ணீரைத் தேக்கி வைத்து கட்டுமானப் பணிக்கு செந்தில் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், அஸ்வின் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது தண்ணீர் தேக்கி வைத்திருந்த குழியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, தகவலறிந்த செம்பனார்கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஸ்வினின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், செந்தில் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.