நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோமல் கிராமத்தில் உள்ள பெரியகுளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் குளத்தை தூர்வார அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
ஆனால், அரசு விதிகளை மீறி 3 அடி ஆழத்தைத் தாண்டி அதிக மண் எடுக்கப்பட்டது. இதையடுத்து, குத்தாலம் வருவாய் துறைக்கு புகார் வந்தது. இதனால் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தி சுமார் 1000 யூனிட் சவுடு மண்ணை பறிமுதல் செய்தனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட 1000 யூனிட் சவுடு மண் 10 லட்சத்திற்கு பொது ஏலம் விடப்பட உள்ளதாக கோட்டாட்சியர் கண்மணி அறிவித்தார்.