மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் கடற்கரை பகுதியில் கண்ணகி சிலை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுக்கியது. இதனைக் கண்ட மீனவர்கள், கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர்.
பூம்புகார் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியது! - crime news
மயிலாடுதுறை: பூம்புகார் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதிங்கியது.
தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன், சடலம் குறித்து கடலோர காவல் படைக்கு புகார் அளித்தார். அதன் பேரில் 55 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்ட கடலோர காவல் படையினர், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர். மேலும் இறந்தவரின் முகத்தில் பலமான இரத்த காயங்கள் உள்ளதால் கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடந்துவருகிறது.
இதையும் படிங்க:துணைவேந்தர்கள் நியமனம் கோட்டையிலிருந்து ராஜ்பவனுக்கு மாற்றப்பட்டது ஏனோ? கி. வீரமணி அறிக்கை