நாகப்பட்டினம் மாவட்டம், மஞ்சக்கொல்லை ஊராட்சியிலுள்ள குமரன் கோயிலுக்குச் சொந்தமான குளத்தில் அடையாளம் தெரியாத இளைஞரின் உடல் மிதந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நாகை நகர காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்ததின் பேரில் தீயணைப்புப் படை வீரர்கள், அந்நிலைய அலுவலர் அன்பழகன் தலைமையில் கோயில் குளத்தில் இறங்கி, கயிறு மூலம் இளைஞரின் உடலைக் கரைக்கு இழுத்து வந்தனர்.
அப்போது இறந்தவரின் உடலை உடற்கூறாய்விற்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல, நகர காவல் துறையினர் தொலைபேசி மூலம் மருத்துவமனை நிர்வாகத்திடம் அமரர் ஊர்தி கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் அமரர் ஊர்தி இல்லையென தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.