நாகபட்டினம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
நாகையில் கடல் சீற்றம் : படகுகள் கரையில் நிறுத்தம் - Boats stopped on shore for sea rage
நாகப்பட்டினம்: கடல் சீற்றம் காரணமாக ஆயிரக்கணக்கான படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
![நாகையில் கடல் சீற்றம் : படகுகள் கரையில் நிறுத்தம் Boats stopped](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11:34:36:1605161076-tn-ngp-01-sea-furious-script-7204630-12112020113050-1211f-00496-231.jpg)
Boats stopped
இந்நிலையில் வேதாரண்யம், ஆறுகாடுத்துறை, கோடியக்கரை, வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் பைபர் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.
மேலும் கடல் சீற்றம் தொடருமானால் பைபர் படகுகளில் கரையோரங்களில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.