தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுக்கடலில் மீனவர்கள் கொண்டாட்டம் - வைரலாகும் காணொலி - Nagapattinam

நாகை: நடுக்கடலில் வேகமாகச் செல்லும் படகில் மீனவ இளைஞர்கள் சிலர், பொழுதுபோக்கிற்காக ஆடல் பாடலுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள காணொலி வைரலாகிவருகிறது.

video

By

Published : Jul 28, 2019, 1:40 PM IST

தற்போதுள்ள காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்கான திறமைகளை காணொலியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு அசத்துவது வழக்கம். நாகையில் மீனவ இளைஞர்கள் ஒருபடி மேல் சென்று நடுக்கடலில் படகில் செல்லும்போது ஆடிப்பாடி கொண்டாடியுள்ளனர். அதனை காணொலியாகவும் எடுத்துள்ளனர்.

நடுக்கடலில் கொண்டாட்டம் வைரலாகும் வீடியோ
அந்தக் காணொலியை, நாகப்பட்டினம் நண்பர்கள் என்ற முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் இளைஞர் ஒருவர் நடுக்கடலில் படகின் வெளியில் தொங்கியபடி ஆபத்தை உணராமல் நடித்துள்ளார். தற்போது அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details