தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் கடல் சீற்றத்தால் கவிழ்ந்த படகு... கடலில் தத்தளித்த மீனவர்கள்! - Boat capsized by sea rage in Nagapattinam

நாகை: கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்ததால், நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் சக மீனவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நாகை
நாகை

By

Published : Dec 8, 2020, 5:13 PM IST

நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக கடந்த சில வாரங்களாக கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர்.

இந்நிலையில், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்ததையடுத்து, நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடங்கினர்.

அதன்படி, வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், குமணன், தங்கம் ஆகிய மூன்று மீனவர்களும் கடலில் மீன் பிடித்துவிட்டு இன்று கரை திரும்பினர்.

அப்போது, திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அவர்களின் பைபர் படகு கவிழ்ந்து விபத்துக்குளானது. இதனைப் பார்த்த சக மீனவர்கள், விரைவாக சென்று கடலில் தத்தளித்தவர்களை பத்திரமாக மீட்டு வந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details