தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலப் புரட்சி திட்டத்தின் கீழ் அதிநவீன விசைப்படகு: மீனவர்கள் வரவேற்பு! - தமிழ்நாடு மீனவர்கள்

நாகை: நீலப் புரட்சி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிநவீன விசைப்படகுக்கு மீனவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் அதிநவீன விசைப்படகு: மீனவர்கள் வரவேற்பு!

By

Published : Jul 30, 2019, 2:43 PM IST

தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் எல்லைத் தாண்டும் விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு நீலப் புரட்சி திட்டம் என்ற பெயரில் ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தை அறிவித்தது. அதற்காக மத்திய அரசு முதற்கட்டமாக 200 கோடி ரூபாய் நிதியை மீனவர்களுக்காக ஒதுக்கியது.

அதன்படி, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு படகுகளை இழந்த ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசின் நிதி பங்களிப்புடன் கேரள மாநிலம் கொச்சியில் உருவாக்கப்பட்ட 16 விசைப்படகுகள் வழங்கப்பட்டன.

ஆழ்கடல் மீன்பிடி தொழிலை மேம்படுத்தும் நோக்கில் 50 விழுக்காடு மானியத்துடன் 80 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த அதிநவீன ஆழ்கடல் விசைப்படகு எந்தவித இயற்கை சீற்றத்தையும் எதிர்கொள்ளும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளதால், இப்படகிற்கு தமிழ்நாடு மீனவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும், நீண்ட நாள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு வசதியாக இந்த விசைப்படகில் ஜிபிஎஸ் கருவி, தொலைக்காட்சி, கழிப்பறை, ஓய்வறை என அனைத்து அதிநவீன அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் அதிநவீன விசைப்படகு: மீனவர்கள் வரவேற்பு!

இதில் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இருபடகுகள் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு நேற்று வந்தன. அப்போது பேசிய மீனவர்கள், ஆழ்கடலில் அதிகளவில் மீன்கள் கிடைத்து வருவதாகவும், கொச்சியில் உருவாக்கப்பட்ட நீலப் புரட்சி படகுகள் கேரள கடல் பகுதியில் மீன் பிடிக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளது. எனவே இந்த படகை தமிழ்நாடு கடற்பகுதியில் மீன்பிடி தொழிலைச் செய்வதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளையும் மீனவர்கள் வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details