தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேட்பாளரை முற்றுகையிட்டு, கோரிக்கை வைத்த பொதுமக்கள்! - நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்: வாக்குசேகரிக்க வந்த வேட்பாளரை முற்றுகையிட்டு, கோரிக்கை வைத்த பொதுமக்கள். உங்களது அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் என்று தாழை சரவணன் உறுதியளித்தார்.

வேட்பாளர் முற்றுகை

By

Published : Apr 15, 2019, 3:31 PM IST

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினரின் பரப்புரை தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில், நாகை நாடாளுமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் தாழை சரவணன் மீனவ கிராமங்களில் தனது பரப்புரையை மேற்கொண்டார்.

அப்போது, அப்பகுதிகளில் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பலதரப்பட்ட கோரிக்கைகளை தாங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, கிராம மக்கள் வேட்பாளரை முற்றுகையிட்டு கோரிக்கையாக வைத்தனர். கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வேட்பாளர் சரவணனும் உறுதியளித்தார்.

பொதுமக்கள் முற்றுகை

பின்னர், ஒரு மூதாட்டி எந்த கட்சியைச் சேர்ந்து, யார் வந்தாலும் இதே நிலை நீடிப்பதாக பரப்புரையின் போது புலம்பியவாறு நின்று கொண்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details