நாகப்பட்டினம் மாவட்டத்தில் 45 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து 44 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில், புட்டபர்த்தி சென்று திரும்பிய ஒருவர் மட்டும் தொடர்ந்து சிக்சை பெற்றுவருகிறார்.
இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளின் தடுப்புகள் அகற்றப்பட்டுவருகிறது. அதன்படி நாகை நகராட்சிக்கு உள்பட்ட நாகூரில் தடை செய்யப்பட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகள் தகரம் கொண்டு மக்கள் வெளியே செல்லாத வகையில் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தது.