திமுகவினர் ஏராளமானோர் பாஜகவில் இணைந்து வருகின்றனர் - கருப்பு முருகானந்தம் - கருப்பு முருகானந்தம்
மயிலாடுதுறை: இந்து கடவுளை தொடர்ந்து அவமதித்து வருவதால் திமுகவினர் ஏராளமானோர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து வருவதாக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் பாஜக தகவல் தொழில்நுட்பம் - சமூக ஊடகப் பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இந்தகூட்டத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் நிர்மல் குமார் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கருப்பு முருகானந்தம் கூறியதாவது; பாஜக 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். விவசாய சட்டத் திருத்த மசோதாவில் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க கொண்டுவரப்பட்டவை.
விவசாயிகள் மீது அக்கறை இல்லாமல் தமிழ்நாட்டில் மீத்தேன் ஹைட்ரோ, கார்பன் திட்டங்களை கொண்டுவந்த திமுக இச்சட்டங்களைப் பற்றி பேச தகுதியற்ற கட்சியாகும்.
அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது. நயன்தாரா போன்ற நடிகைகளுடன் நடிக்கும் சினிமா நடிகரை கட்சியின் தலைவர் என்று கூறுவதாலும், இந்துக் கடவுள்கள் கலாசாரங்களை தொடர்ந்து அவமதித்து வருவதாலும் ஏராளமான திமுகவினர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்றார்.