மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (செப் 14) நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று கலந்துகொண்டார். அவரை பாஜகவினர் சிலம்பம், சுருள் விளையாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளால் வரவேற்றனர்.
தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்ற பாஜக மாநில தலைவா் - நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்
பாஜக மாநில தலைவா் அண்ணாமலை தருமபுரம் ஆதீனத்தை நேற்று (செப் 14) நேரில் சென்று சந்தித்து ஆசிப் பெற்றார்.
பாஜக மாநில தலைவர்
இந்நிகழ்ச்சியில், பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம், மாநில செயலாளர் தங்க. வரதராஜன், மாவட்ட தலைவர் ஜி.வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பிறகு தருமபுரம் ஆதீனத்துக்குச் சென்ற அண்ணாமலைக்கு ஆதீனத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கபட்டது. அப்போது அவர், தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார்.