தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மு.க. ஸ்டாலினுக்கு விவசாயம் குறித்து ஒன்றும் தெரியாது, பூவை தூவச் சொன்னால், தட்டை வீசுகிறார்'- பாஜக - Procurement stations in Tamil Nadu are in the hands of DMK Commission agents

தமிழ்நாட்டில் கொள்முதல் நிலையங்கள் திமுக கமிஷன் ஏஜெண்டுகள் கையில் உள்ளன என்று பாஜக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் குற்றஞ்சாட்டினார். மேலும், மு.க. ஸ்டாலினுக்கு விவசாயம் குறித்து எதுவும் தெரியாது, நீரை வரவேற்க பூவை தூவச் சொன்னால், தட்டை வீசுகிறார் என்றார்.

தமிழ்நாட்டில் கொள்முதல் நிலையங்கள் திமுக கமிஷன் ஏஜெண்டுகள் கையில் உள்ளது - பாஜக மாநில விவசாய அணி தலைவர்
தமிழ்நாட்டில் கொள்முதல் நிலையங்கள் திமுக கமிஷன் ஏஜெண்டுகள் கையில் உள்ளது - பாஜக மாநில விவசாய அணி தலைவர்

By

Published : Jun 6, 2022, 8:48 AM IST

மயிலாடுதுறையில் பாஜக விவசாய அணி நிர்வாகிகள் கூட்டம் நேற்று (ஜூன் 5) நடைபெற்றது. மாவட்ட தலைவர் அகோரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் பங்கேற்றுப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாகராஜ், "தமிழ்நாட்டில் விவசாயத்தைப் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது.

தண்ணீர் திறந்து விடும் போது பூவை தூவச் சொன்னால் தட்டுடன் வீசுகிறார். வயலில் கார்ப்பெட் விரித்துப் பார்வையிடுகிறார். தமிழ் நாட்டின் கனிம வளங்கள் கொள்ளைபோய்க் கொண்டிருக்கின்றன. கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் திமுக ஏஜெண்டுகள் கைப்பிடியில் உள்ளன. எதிலும் கமிஷன், கரப்ஷன் (ஊழல்) என்று நடைபெற்று வரும் ஒரு ஸ்டிக்கர் ஒட்டும் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பாஜக மாநில விவசாய அணி தலைவர் பேட்டி

நூறு நாள் வேலைத் திட்டத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. நெல் எப்படி பயிராகும் என்றெல்லாம் இவருக்குத் தெரியாது. புகைப்படம் எடுத்து போட்டோக்கு போஸ் கொடுப்பதில் தான் அவரது கவனம் உள்ளது. ஆனால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக, பாஜக இடையே எந்த வித குழப்பமும் இல்லை - அண்ணாமலை அதிரடி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details