நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நலம் மற்றும் அரசியல் பிரவேசம் தொடர்பாக சமீபத்தில் அறிக்கையொன்றினை வெளியிட்டார். இதையடுத்து அவரது ரசிகர்கள் ரஜினியின் ஆரோக்கியத்திற்காக மதங்களைக் கடந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
ரஜினிகாந்த் நலம் பெற வேண்டி பாஜக சிறப்பு வழிபாடு! - ரஜினிகாந்த் நலம் பெற சிறப்பு வழிபாடு
நாகப்பட்டினம்: நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருவிழந்தூர் ஆஞ்சநேயர் கோயிலில் பாஜகவினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி மயிலாடுதுறை திருவிழந்தூர் ஆஞ்சநேயர் கோயிலில் பாரதிய ஜனதா கட்சியினர் நேற்று (ஜன.2) சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பாஜக மயிலாடுதுறை நகர தலைவர் மோடி.கண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் ராஜேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் ஆகியோர் கலந்துகொண்டு, ரஜினிகாந்த் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.
இதையும் படிங்க:மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி?