நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த மாதம் 31ஆம் தேதி பாஜக சார்பில் முப்பெரும் விழா பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் பங்கேற்று பேசிய பாஜக மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி இணை பொறுப்பாளர் அகோரம் என்பவர், மயிலாடுதுறை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும், காக்கிச் சட்டையைக் கழட்டிவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்து பேசினார்.
எஸ்ஐக்கு கொலை மிரட்டல்: பாஜக பிரமுகர் கைது! - BJP person arrested for intimidation
நாகை: காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் அகோரம் என்பவரை மயிலாடுதுறை காவல் துறையினர் கைது செய்தனர்.
![எஸ்ஐக்கு கொலை மிரட்டல்: பாஜக பிரமுகர் கைது!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5051519-thumbnail-3x2-ha.jpg)
BJP person arrested for intimidation to police
கொலை மிரட்டல் விடுக்கும் பாஜக பிரமுகர்
அவருடைய இந்தப் பேச்சின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து, ராமமூர்த்தி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை காவல் துறையினர், அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்து திட்டியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அகோரத்தை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: விஜய் வீட்டிற்கு வெடிகுண்டி மிரட்டல் விடுத்தவர் கைது!