மகா சிவராத்திரி விழாவையொட்டி பாஜக ஏற்பாட்டில் பனி லிங்க வழிபாடு நடைபெற்றது. இதில் மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சேதுராமன் உள்ளிட்டோர் பங்கற்று வழிபாடு நடத்தினர்.
மகா சிவராத்திரியொட்டி பனிலிங்க சிறப்பு வழிபாடு
மகா சிவராத்திரியொட்டி மயிலாடுதுறையில், பனி லிங்க சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
BJP organized snow linga worship on the occasion of Maha Shivaratri In Mayiladuthurai
முன்னதாக கோமாதாவிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல், மகா சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் அமைந்துள்ள கேதாரநாதர் கோயிலில் நடைபெற்ற இசை விழாவில், மயிலாடுதுறை ஸ்ரீதியாகப்ருமம் குரலிசைக் கலைக்கூட மாணவர்கள் பங்கேற்று கச்சேரி நடத்தினர்.