நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்போது குறுவை விவசாய அறுவடை நடைபெற்று வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளின் நெல்லை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்கிறது. மயிலாடுதுறை பகுதியில் 20க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்கும் போது 40 கிலோ எடைகொண்ட மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு கொள்முதல் செய்வதோடு, 40 கிலோ எடைக்கு பதிலாக 42 கிலோ எடையை எடுத்துக் கொள்கின்றனர்.
அரிசி ஆலையை முற்றுகையிட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேட்டை கண்டித்து மயிலாடுதுறையில் நவீன அரிசி ஆலையை முற்றுகையிட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கொள்முதல் நிலையங்களில் முறைகேடாக பெரும் தொகையை அலுவலர்கள் வரை பங்கு பிரித்துக் கொள்வதால் ஊழல் முறைகேட்டை அலுவலர்கள் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், கோமல் நெல் கொள்முதல் நிலையத்தில் நடைபெறும் முறைகேட்டை தட்டிக்கேட்ட பாஜக பிரமுகர் மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்தும், கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை களைய கோரி மாவட்ட பாஜக சார்பில் சித்தர்காடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 300க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு நவீன அரிசி ஆலையை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் காரணமாக மயிலாடுதுறை - கும்பகோணம் பிரதான சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது