தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘திமுக ஒரு குடும்ப அரசியல் கட்சி’ - காயத்ரி ரகுராம் விமர்சனம்!

நாகப்பட்டினம்: தாத்தாவுக்கு பின் மகன், அவருக்கு பிறகு பேரன் என்பது போல் திமுக குடும்ப அரசியல் கட்சி என பாஜக கலை மற்றும் கலாசார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் சாடியுள்ளார்.

பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம்
பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம்

By

Published : Jan 10, 2021, 4:54 PM IST

நாகையில் பாஜக சார்பில் ‘நம்ம ஊரு பொங்கல் விழா’ இன்று (ஜன. 10) கொண்டாடப்பட்டது. அவுரித்திடலில் நடைபெற்ற பொங்கல் விழாவில், ஏராளமான பாஜக மகளிர் அணியினர் கலந்துகொண்டு கரும்பு, மஞ்சள், புத்தரிசி இட்டு பொங்கல் வைத்தனர். நிகழ்ச்சியில், மாநில கலை மற்றும் கலாசார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் கலந்துகொண்டு பொங்கல் விழாவினை சிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், “தமிழ்நாடு விவசாயிகளுக்கு இவ்வாண்டு மிக முக்கியமான பொங்கல். விவசாயிகளின் நலனுக்காக 96 கோடியும், இதில் தமிழ்நாட்டிற்காக மட்டும் பிரதமர் மோடி ஐந்தரை லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளார்.

பாஜக தலைவர் காயத்ரி ரகுராம் செய்தியாளர் சந்திப்பு

இந்து கடவுளை தொடர்ந்து விமர்சித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு, தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது தான் மிக முக்கியம்” என்றார்.

மேலும், தாத்தாவுக்கு பின் மகன், அவருக்கு பிறகு பேரன் என்பது போல் திமுக ஒரு குடும்ப அரசியல் கட்சி. அக்கட்சியை பற்றி மக்கள் தெளிவாக புரிந்து கொண்டதால் தான், தற்போது திமுகவை விட்டு அனைவரும் பாஜகவிற்கு வரத்தொடங்கியுள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க...வா தலைவா! வா - ரஜினியின் அரசியல் வருகைக்காக ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details