நாகப்பட்டினம்: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று சந்தித்து அருளாசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விவசாயிகளின் நலன் கருதி மூன்று சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது. இத்திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பரப்புரை மேற்கொண்டு வருகின்றன.
புதிய வேளாண் சட்டத்தின்படி விவசாயி தாங்கள் விரும்பினால் தங்கள் விளைபொருள்களை மண்டியில் குறைந்தபட்ச ஆதார விலைக்கு விற்பனை செய்யலாம். அதைவிட அதிகவிலை கிடைத்தால் தனியார் வியாபாரிகளிடம் விற்றுக்கொள்ளலாம். இதில், எந்தத் தவறும் இல்லை.
தருமபுரம் ஆதினத்தில் ஹெச்.ராஜா மேலும், ஒப்பந்த பண்ணையம் குறித்து விமர்சித்துப் பேசும் எதிர்க்கட்சிகள் மத்திய பிரதேசம், குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இது ஏற்கெனவே உள்ளதை மறைக்கின்றன. திமுக தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட்டால் மட்டுமே இங்கு விவசாயிகள் வாழமுடியும்.
திருமாவளவன் எம்பியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தும் ஹெச்.ராஜா இல்லையெனில் இன்றைக்கு உதயநிதி ஸ்டாலினுக்கும், நாளை இன்பநிதி ஸ்டாலினுக்கும் தமிழ்நாட்டு மக்கள் அடிமையாகத்தான் இருக்குவேண்டிய சூழல் உருவாகும். சமயகுரவர்களின் முதன்மையானவரான ஞானசம்பந்தப் பெருமான் குறித்து தரக்குறைவாக விமர்சித்த திருமாவளவனை தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும். இந்துப் பெண்களை இழிவுபடுத்தி பேசிய திருமாவளவன் கூட்டணி வைக்கும் அனைத்துக் கட்சிகளும் இந்து விரோத கட்சிகள்தான்" என்றார்.
இதையும் படிங்க:27ஆவது ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்ற முதலமைச்சர்!