மயிலாடுதுறையில் விஸ்வஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் வாஞ்சிநாதன் இல்லத் திருமண விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "ஹிந்து தர்மத்துக்கு தொண்டு தொட்டு வழங்கி வரும் பேர் சனாதன தர்மம். சனாதன தர்மம் என்பது நிலையானது.
தாய், சகோதரி, மனைவி ஆகிய உறவுகள் நிலையானது. இதை எப்படி மாற்ற முடியும். திராவிடர்கள் அடிமுட்டாள்கள் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது. சனாதன தர்மம் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என ஜெர்மானிய ஆய்வாளர் மேக்ஸ்மூல் தெரிவித்துள்ளார். வள்ளுவர் சொன்னதைத் தான் உதயநிதி சொல்லியிருப்பதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
செய்யும் தொழிலின் அடிப்படையில் வேற்றுமை இல்லை என்பதை செய்தொழில் வேற்றுமை யான் என வள்ளுவரும், கண்ணபிரான், செய்யும் தொழிலின் அடிப்படையில் தான் 4 வர்ணங்களை உருவாக்கி உள்ளதாக கூறியுள்ளனர். பகவத்கீதையில் சொன்ன விஷயம் எதையும் வள்ளுவர் விடவில்லை. வைரமுத்து படிப்பறிவில்லாதவர். இவருக்கு தெரிந்ததையெல்லாம் பாடகி சின்மயி me too-வில் கூறிவிட்டார்.
வைரமுத்து ஆண்டாள் குறித்து தனியார் நாளிதழில் அருவெருக்கத்தக்க வார்த்தையில் பேசிய பண்பற்ற நபர். சனாதன இந்து தர்மத்தை இழிவுபடுத்துகிற கும்பல் வேரோடும், வேரடி மண்ணோடும் களையப்பட வேண்டும். இதனை பாஜக மட்டும் சொல்லவில்லை. ஆந்திர முதலமைச்சர், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி , டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனா உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.