தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக நிர்வாகி காருக்கு தீவைத்த விஷமிகள்: நாகையில் பரபரப்பு - கார் எரிந்த சம்பவம்

திருப்பூண்டியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி மாவட்டத் துணைத் தலைவர் புவனேஸ்வர் ராம் வீட்டின் முன்பு தகர சீட்டு போட்ட செட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த புது ஆம்னி காரில் அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளது குறித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

காருக்கு தீ
காருக்கு தீ

By

Published : Feb 10, 2022, 2:16 PM IST

நாகப்பட்டினம்: திருப்பூண்டியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி மாவட்டத் துணைத் தலைவர் புவனேஸ்வர் ராம். அவர் வீட்டுக்கு முன்பு தகர சீட்டு போட்ட செட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது புது ஆம்னி காரில் அடையாளம் தெரியாத நபர்கள் தீவைத்துள்ளனர்.

இதில் காரின் இடது பக்க கதவு, இடது பக்க டயர் ஆகியவை தீப்பிடித்து எரிந்துள்ளன. இதனை அவ்வழியாக வந்தவர்கள் தகவல் தெரிவித்ததன்பேரில், வீட்டில் இருந்த அவரது மனைவி புவனேஸ்வரி ராம், அவரது தாய் ராஜேஸ்வரி ஆகியோர் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

பாஜக பிரமுகர் காருக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு

இது குறித்து கீழையூர் காவல் நிலையத்தில் புவனேஸ்வர் ராம் புகார் அளித்ததின்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பாஜக நிர்வாகியின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கமலாலயம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

ABOUT THE AUTHOR

...view details