தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கால் அவதிப்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பம் - மோடி கிட் வழங்கிய பாஜக - Modi Kit

நாகை: மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மோடி கிட் விநியோகம் செய்யப்பட்டது.

bjp-distributed-modi-kit-to-physically-challenged-people-in-mayiladuthurai
bjp-distributed-modi-kit-to-physically-challenged-people-in-mayiladuthurai

By

Published : Apr 24, 2020, 4:00 PM IST

கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டடுள்ளது. இந்த திடீர் உத்தரவால் ஏழை எளிய மக்களின் பொருளாதார நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை நன்றாக உள்ளவர்களே அன்றாட வாழ்க்கையை நடத்த சிரமப்படும் நிலையில், மாற்றுத்திறனாளிகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்த நிலையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரி கிராமத்தில் வசித்துவரும் முரளியின் குடும்பத்தினர் 5 பேருமே மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.

நாகையில் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு மோடி கிட் வழங்கிய பாஜக

சிறு சிறு வேலைகளைச் செய்து வாழ்க்கை நடத்திவந்த இவர்கள், ஊரடங்கு உத்தரவால் மிகவும் வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களது நிலைமையை அறிந்த பாஜக மயிலாடுதுறை நகர செயலாளர் கண்ணன், அங்கு சென்று வறுமையால் பாதிக்கப்பட்டிருந்த குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள், முகக்கவசங்கள் அடங்கிய 'மோடி கிட்'-ஐ வழங்கினார்.

இதையும் படிங்க:காட்டெருமைக்கு உணவளிக்கும் மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details