சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று அரவக்குறிச்சி பரப்புரையின்போது பொதுமக்கள் மத்தியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியது நாடு முழுவதும் எதிர்ப்பு அலையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இந்துக்களின் மனம் புண்படும்படி பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரியும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இன்று நாகையில் பாஜக மாவட்ட தலைவர் நேதாஜி தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் புகார் மனு அளித்தார்.
கமல்ஹாசனுக்கு எதிராக பாஜக புகார்! - bjp
நாகை: கமல்ஹாசனை பின்னால் இருந்து இயக்குபவர்களை கண்டறிய வேண்டும் என காவல் கண்காணிப்பாளரிடம் பாஜக புகாரளித்துள்ளது.
கமலஹாசனுக்கு பாஜக கண்டனம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாவட்ட தலைவர் நேதாஜி, “இந்துக்களை இழிவாக பேசிய கமல்ஹாசன் மீது உரிய விசாரணை மேற்கொள்வதுடன், இந்த விவகாரத்தில் அவரைப் பின்னால் இருந்து யார் இயக்குகிறார்கள் என்பதையும் அரசு கண்டறிய வேண்டும்” என வலியுறுத்தினார்.