தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரஃபேல் போர் விமானம் வருகை - பாஜக கொண்டாட்டம்! - Nagapattinam district news

நாகப்பட்டினம்: ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்திறங்கியதையடுத்து மயிலாடுதுறையில் உள்ள பாரதிய ஜனதாவினர் கொண்டாடினார்கள்.

பாஜகவினர்
பாஜகவினர்

By

Published : Jul 30, 2020, 4:08 PM IST

ஃபிரான்ஸ் நாட்டிலிருந்து அதிவிரைவு தாக்குதல் திறன் கொண்ட 5 ரஃபேல் போர் விமானங்கள் நேற்று (ஜூலை29)இந்தியா வந்தடைந்தது. இந்த விமானங்கள் இந்திய விமானப்படையில் விரைவில் சேர்க்கப்பட உள்ளது.

இந்நிலையில் ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்தடைந்ததை கொண்டாடும் வகையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

மேலும் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு வரவேற்பு தெரிவித்தனர். ட்ரோன் கேமராவை ரஃபேல் விமானமாக கருதி பூ துவி வரவேற்றனர்.

மயிலாடுதுறை நகர பாஜக தலைவர் மோடி கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய அரசு தலைமை வழக்குரைஞர் ராஜேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சேதுராமன் உள்ளிட்ட அக்கட்சியினர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details