நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 24ஆம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அதைத்தொடர்ந்து ஏப்ரல் 7ஆம் தேதி இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுநேற்று (ஜூலை 12) மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மாவட்டத்தின் எல்லை வரைமுறை செய்வதற்கான சிறப்பு அலுவலராக ஐஏஎஸ் லலிதா என்பவரையும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக ஸ்ரீநாதாவையும் நியமித்துள்ளது.