தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்கிய பாஜகவினர் - வலுக்கும் எதிர்ப்பு - Tamil Nadu Rural Development Officers Association protest

நாகப்பட்டினம்: ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்கிய பாஜகவினரை கைது செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

protest
protest

By

Published : Dec 1, 2020, 11:01 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் பெண் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது தாக்குதல் நடத்தியும் அரசு சின்னம் மற்றும் அரசு வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய பாஜகவினரை கைது செய்யக்கோரி மயிலாடுதுறை, செம்பனார் கோவில், குத்தாலம் சீர்காழி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செம்பனார் கோவில்வட்டார தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து முழக்கமிட்டனர்.

அதேபோன்று மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் மாவட்ட இணைச்செயலாளர் நெடுமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மருத்துவக் கலந்தாய்வு - எட்டு மாணவர்கள் இருப்பிட சான்றிதழில் சந்தேகம்!

ABOUT THE AUTHOR

...view details