கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கடந்த நான்கு மாதங்களாக அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகிய ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த மாதம் முதல் அரிசி தவிர்த்த மற்ற ரேஷன் பொருள்கள் விலைக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்றை பொருட்படுத்தாமலும், தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்காமலும் மக்கள் ரேஷன் பொருள்களை வாங்கிச் சென்றுள்ளனர்.
இதன் காரணமாக மயிலாடுதுறையில் உள்ள ரேஷன் கடைகளில் ‘பயோ-மெட்ரிக்’ முறையில் இன்று (ஆக.20) முதல் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் ஸ்மார்ட் கார்டு மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது ‘பயோ-மெட்ரிக்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.