தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகன சோதனையில் சிக்கிய இருசக்கர வாகன திருடன்: 12 பைக்குகள் பறிமுதல் - வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடன்

நாகை: சீர்காழியில் வாகன சோதனையில் சிக்கிய இருசக்கர வாகனத் திருடனிடமிருந்து 12 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டன.

nagapattinam
nagapattinam

By

Published : Mar 22, 2020, 9:57 AM IST

நாகை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் காணாமல் போய்க்கொண்டிருந்தன. அதனால் சீர்காழி காவல் துறையினர் இருசக்கர வாகனத் திருடர்களைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று காவல் துறையினர் சீர்காழியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது அவ்வழியே வந்த இளைஞர் ஒருவரை நிறுத்தி விசாரிக்கையில் அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தார்.

வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடன்

அதில் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கீழையூரைச் சேர்ந்த சதீஷ் (24) என்பதும், இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்தது. அதைத்தொடரந்து அவரிடமிருந்து 12 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டன. மேலும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: வாணியம்பாடியில் பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு!

ABOUT THE AUTHOR

...view details