தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புனித ரமலான் மாதம் தொடக்கம் - நாகை மாவட்ட தர்காவில் சிறப்பு தொழுகை

புனித ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டு நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

புனித ரமலான் மாதம் தொடக்கம்
புனித ரமலான் மாதம் தொடக்கம்

By

Published : Apr 3, 2022, 11:32 AM IST

சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக முஸ்லிம்களால் ரம்ஜான் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்கள்.

பிறை தென்பட்டு வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார். அதனை தொடர்ந்து, ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டு முஸ்லிம்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க துவங்கினர். நாகூர் ஆண்டவர் தர்கா மட்டுமின்றி, நாகை மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

அதிகாலை முதல் நோன்பை கடைபிடிக்க உள்ள இஸ்லாமியர்கள், இந்த நோன்பு காலங்களில் காலங்களில் பசியுடன் இருந்து, வீண் விவாதங்களை தவிர்த்து இறை பக்தியுடன் ஜகாத் என்னும் ஏழைகளுக்கும் வசதியற்றவர்களுக்கு உதவி செய்வது இப்பண்டிகையின் சிறப்பாக உள்ளது.

இதையும் படிங்க : மத்திய பிரதேசத்தில் மாயாஜாலம்: வானத்தில் தெரிந்த வர்ணஜாலம்!

ABOUT THE AUTHOR

...view details