தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை ; தரங்கம்பாடியில் மின்விளக்கு அகற்றம் - தரங்கம்பாடியில் புயல்

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாத்தலமான தரங்கம்பாடியில் உயர் மின்விளக்கு கோபுரங்களில் இருந்து விளக்குகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டன.

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை ; தரங்கம்பாடியில் உயர் மின்விளக்கு அகற்றம்
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை ; தரங்கம்பாடியில் உயர் மின்விளக்கு அகற்றம்

By

Published : Dec 7, 2022, 10:02 PM IST

நாகப்பட்டினம்:வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் 27 மீனவர் கிராமங்களைச் சேர்ந்த 15,000க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

படகுகளைப் பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று பூம்புகார், வானகிரி, தரங்கம்பாடி, திருமுல்லைவாசல், பழையாறு, உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மீன்வளத்துறை சார்பில் வாகனங்களில் ஒலிபெருக்கி வைத்து எச்சரிக்கை செய்யப்பட்டு வருகின்றனர்.

8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒன்பதாம் தேதி மிக கனமழைக்கான ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து கடலை நோக்கி 60 கிலோ மீட்டர் வரையிலான காற்று வீசும் என்று வானிலை ஆய்வு துறை அறிவித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக புகழ் பெற்ற சுற்றுலா பகுதியான தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை பகுதியில் உயர் மின்விளக்கு கோபுரங்களில் இருந்து விளக்குகளை தரங்கம்பாடி பேரூராட்சி ஊழியர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். மேலும் பொதுமக்கள் கடற்கரைக்கு நாளை முதல் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை ; தரங்கம்பாடியில் உயர் மின்விளக்கு அகற்றம்

இதையும் படிங்க: புதுச்சேரி, ஶ்ரீ ஹரிகோட்டா இடையே புயல் கரையைக் கடக்க வாய்ப்பு - எப்போது தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details