தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் துளிர்க்க வேண்டும் எங்கள் சந்ததி.... கிராம மக்களின் தரமான சம்பவம்..! - ஆலமரத்திற்கு மீண்டும் உயிர்தந்த மக்கள்

நாகை: கஜா புயலில் வேரோடு சாய்ந்த 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்திற்கு கிராம மக்கள் மறுவாழ்வு அளித்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் வேதாரண்யம் அருகே நடந்துள்ளது.

banyan

By

Published : Aug 16, 2019, 12:39 PM IST

நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின் கோரதாண்டவத்தில், லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவற்றை அப்புறப்படுத்தவதற்கே பல மாதங்கள் நீடித்தன.

இந்தச் சூழலில், நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மறைஞாயநல்லூர் பகுதியில் அமைந்துள்ள துரோபதி அம்மன் கோயிலில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தை கிராம மக்களால் தெய்வமாக நினைத்து வழிபாடு நடத்தி வந்தனர்.

மரத்திற்கு மறுவாழ்வு தந்த மக்கள்
இந்நிலையில் இந்த மரமானது கஜா புயலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் வேருடன் சாய்ந்தது. இதனால் மனவேதனை அடைந்த அப்பகுதி மக்கள் இம்மரத்திற்கு மீண்டும் உயிர் உண்டாக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.இறுதியாக ஊர்மக்களின் உதவியுடன் ஒன்பது மாதங்களாக சாய்ந்த நிலையில் இருந்த மரத்தினை ஜேசிபி, பொக்லைன் உதவியுடன் தற்போது நட்டு வைத்துள்ளனர்.
வேரோடு சாய்ந்த ஆலமரம் மீண்டும் நட்டு வைக்கப்பட்டது
மேலும் அப்பகுதியில் தண்ணீர் பிரச்னை உள்ளதால், மரத்திற்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டுவந்து விடப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த மரம் எங்களின் இறைவழிபாட்டு மரம் ஆகும். இது இப்படி சாய்ந்த நிலையில் இருந்தது மனவேதனையை அளித்தது. இது மீண்டும் பழைய படி விழுதுகள் விட்டு எங்களின் சந்ததியினர் அதில் ஊஞ்சல் விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் நட்டுவைத்துள்ளோம் என்றனர்.
வேரோடு சாய்ந்த ஆலமரத்திற்கு மறுவாழ்வு
நல்ல நிலையில் இருக்கும் பல மரங்களை வெட்டி விற்பனை செய்து பணம் ஈட்ட நினைக்கும் பலரது மத்தியில், சாய்ந்த மரத்தினை பல ஆயிரம் செலவு செய்து மீண்டும் அதனை உயிர் பெற வைத்துள்ள கிராம மக்களின் மனிதாபிமானத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details