நாகை மாவட்டம் நாகூரைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டன. இதனால் அங்கிருந்த அத்தியாவசிய கடைகள் மற்றும் வங்கிகள் மூடப்பட்டன.
இந்நிலையில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். தொடர்ந்து தடை செய்யப்பட்ட பகுதியான நாகை அடுத்த நாகூரில் ஒரு மாத காலத்திற்கு பிறகு ஒரு சில வங்கிகள் இன்று திறக்கப்பட்டன. வங்கிகள் திறக்கப்பட்டதால் இன்று பணம் எடுக்க அப்பகுதி மக்கள் குவிந்தனர்.
நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் மேலவாஞ்சூரில் உள்ள இந்தியன் வங்கி கிளை திறந்தவுடன் கடும் வெயில்லையும் பொருட்படுத்தாமல் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கும், கேஸ் மானியம் எடுப்பதற்கும் தங்களின் தேவைகளுக்கு பணம் எடுக்கவும் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
நாகூர் கடைவீதியில் இருந்து மேலவாஞ்சூர் வரைக் காத்திருந்த பொதுமக்கள் சமூக இடைவெளியில் நின்றும், குடை பிடித்தும் முகக்கவசம் அணிந்து வங்கிகளிலிருந்து பணம் எடுத்துச் செல்கின்றனர்.
இதையும் படிங்க:கரோனாவை வென்ற ஈரோடு... பச்சை மண்டலமாகத் தேர்வு