நாகை மாவட்டம் சீர்காழியில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மண்டல செயலாளர் ராஜவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 11ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், முடிந்துபோன 10ஆவது ஊதிய ஒப்பந்தத்தை புதுபிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் - மத்திய அரசை எச்சரிக்கும் வங்கி ஊழியர்கள் - bank employees protest
நாகை: மார்ச் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் - மத்திய அரசை எச்சரிக்கும் வங்கி ஊழியர்கள்
இதனைத் தொடர்ந்து தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மண்டல செயலாளர் ராஜவேல் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், எங்களது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றும் வரையில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம். வருகிற மார்ச் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போகிறோம். மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபடாவிட்டால், ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.