மயிலாடுதுறை: மயிலாடுதுறை சில்வர் ஜூப்ளி மெட்ரிகுலேஷன் பள்ளியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மயிலாடுதுறை மாவட்ட குழு சார்பாக வாசிப்பு இயக்கம் துவக்க விழா இன்று (ஆகஸ்ட் 27) நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராசா ராமன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சாகித்திய அகாடமி அமைப்பின் பால புரஸ்கர் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர், மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் வாசிப்பிற்கும் விவாதத்திற்கும் என்ற தலைப்பில் எழுத்தாளர் உதயசங்கரின்சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது பெற்ற ஆதனின் பொம்மை (சிறார் நூல்) விவாதிக்கப்பட்டது. பின்னர் ஆதனின் பொம்மை நூலை எழுதிய எழுத்தாளர் உதயசங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ இன்றைய தலைமுறையில் பொதுவாக வாசிப்பு திறன் குறைந்து விட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. தமிழக அரசு மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது. இளைய தலைமுறையினரிடம் வாசிப்புத் திறனை ஏற்படுத்துவதற்காக ஆசிரியர்கள் பெற்றோர்கள் இலக்கிய அமைப்பினர் உள்ளிட்ட அனைவருமே அதற்கான பணிகளைச் செய்ய வேண்டும்.
வரலாற்றையும், அறிவியலையும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் நாம் உள்ளோம். இடையிடையே வரலாற்றை மாற்றுவதும் திரிப்பதுமான வேலைகள் நடந்து கொண்டே உள்ளது. கட்டுக் கதைகளை உண்மை என்று நம்ப வைக்கும் வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. அதை நாம் பிரித்து அறிந்து கொள்ள வேண்டுமென்றால் நம்முடைய வரலாற்றையும் வரலாற்று நூல்களையும் தெரிந்து கொண்டால் அதற்கு அறிவியல் துணை நிற்கும்.
இதையும் படிங்க:எண்ணும் எழுத்தும் திட்டத்தை 3வது நபர்களை வைத்து ஆய்வு செய்வதா? - ஆசிரியர்கள் கொந்தளிப்பு