தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பக்ரீத் கொண்டாட்டம்: சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்! - பக்ரீத் சிறப்பு தொழுகை

நாகை, தருமபுரி, நெல்லை போன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

prayer

By

Published : Aug 12, 2019, 11:32 AM IST

நாகையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை!

தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். இதேபோல் நாகை மாவட்டம், நாகூரில் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சுமையா கார்டனில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி தங்கள் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனா்.

பக்ரீத் கொண்டாட்டம்

தருமபுரியில் கூட்டுத்தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!

தருமபுரி நகரப்பகுதியில் அமைந்துள்ள புனித ஈத்கா மைதானத்தில் பக்ரீத் தொழுகை மதகுரு பாப்சிலேகிரிம் தலைமையில் நடைபெற்றது. சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கூட்டுத்தொழுகையில் ஈடுபட்டனர். இதே போல் மாவட்டத்தில் பாலக்கோடு. காரிமங்கலம், பென்னாகரம், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் ரமலான் சிறப்புத் தொழுகையில் ஏராளமானோர் கலந்துகொண்டனா்.

சிறப்புத் தொழுகையில் முஸ்லீம்கள்

தஞ்சையில் திறந்தவெளியில் தொழுகை!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் சி.எம்.பி தெருவில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திறந்தவெளியில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்களுக்கு என தனி இடமும் பெண்களுக்கென தனி இடமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தொழுகையின் நோக்கம்

சிவகங்கையில் சிறப்புத் தொழுகை!

சிவகங்கை மாவட்டம் மதுரை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் கூட்டுத் தொழுகை நடத்தினர். மக்கள் அனைவரும் சகோதரத்துவத்தோடு ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று இந்தக் கூட்டு தொழுகையின்போது வேண்டிக் கொண்டனர்.

பக்ரீத் சிறப்புத் தொழுகை

நெல்லையில் பக்ரீத் பண்டிகை!

நெல்லை மாவட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலப்பாளையம், தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

தொழுகையில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள்

நெல்லை மாநகரில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் மேலப்பாளையத்தில் மாநகராட்சி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கடையநல்லூரில் காயிதேமில்லத் திடலில் நடைபெற்ற தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சிறப்புத் தொழுகையில் குழந்தைகள்

ABOUT THE AUTHOR

...view details