மயிலாடுதுறை: சீர்காழி மதீனா நகரைச் சேர்ந்த தம்பதியரின் மகன்களான நிதீஷ் குமார் மற்றும் சிவராஜ், தங்களது உறவினர் வீட்டில் இருந்து நாய்க்குட்டி ஒன்றை எடுத்து வந்து வளர்த்து வந்தனர். அதற்கு 'சிக்கி' எனப்பெயர் சூட்டினர். குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக மாறிய நாய்க்குட்டி, வீட்டில் உள்ள அனைவரிடமும் அதீத பாசத்துடன் பழகி வருகிறது.
தற்போது 'சிக்கி' கருவுற்றுள்ளது. வீட்டில் அங்கத்தினராக வளர்ந்து வந்த நாய்க்குட்டியை, தங்களது பெண் குழந்தை போல் கருதி, அதற்கு சீமந்தம் செய்ய வேண்டும் என நினைத்துள்ளனர். அதன்படி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சீமந்த அழைப்பையும் விடுத்துள்ளனர்.