மயிலாடுதுறை மாவட்டம், பல்லவராயன்பேட்டை, ஆனந்தகுடி, அருண்மொழித்தேவன் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகளை தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு இன்று (நவ.20) பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’மயிலாடுதுறை மாவட்டத்தை மழையால் பாதித்த மாவட்டமாக அறிவித்து; அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும், அமைச்சர்கள் உள்ள மாவட்டங்களில் ரூ.50 கோடி, ரூ.60 கோடி என காப்பீட்டுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் அமைச்சர் இல்லாத மாவட்டமாக உள்ளதால் குறைந்த நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட விவசாயிகளை அழைத்துப் பேசவேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துவோம்.
அதற்கும் உடன்படவில்லை என்றால் சென்னையை முற்றுகையிடுவோம்; முறையாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணமாக வழங்கவேண்டும், தேர்தல் வந்தால் நாட்டின் முதுகெலும்பாக நினைக்கும் அரசுகள் தேர்தலுக்குப்பின் விவசாயிகளை அடிமைகளாகக் கருதுவது வேதனை அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். அப்போது, சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மயிலாடுதுறை விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரிக்கை இதையும் படிங்க: ஈபிஎஸ் வழக்குகளிலிருந்து விடுபட வேண்டி வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் வழிபாடு