தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் நடைபெற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறையில் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட உணவு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் பணியாளர்களுக்கு விலையில்லா ஹெல்மெட் வழங்கும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

By

Published : Aug 1, 2022, 1:14 PM IST

விலையில்லா ஹெல்மெட் வழங்கி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி
விலையில்லா ஹெல்மெட் வழங்கி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை : மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட உணவு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஊழியர்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி இன்று(ஆக.1) மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா பங்கேற்று விலையில்லா ஹெல்மெட்டுகளை ஹோட்டல், பேக்கரி மற்றும் ஸ்வீட் ஸ்டாலில் பணி புரியும் ஊழியர்களுக்கு வழங்கினார்.

தொடர்ந்து தலைக்கவசம் உயிர்க்கவசம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேருந்து நிலையத்தில் புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

விலையில்லா ஹெல்மெட் வழங்கி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்வோர் சலுகைகள் அறிவிக்க வேண்டும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஹெல்மெட் வாங்குபவர்களுக்கு 20 சதவீதம் ஹெல்மெட் விலையில் தள்ளுபடி செய்வது என்றும், ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு விற்பனை விலையில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்தனர்.

கடந்த ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 65 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 400-க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், உயிரிழப்புகளை தடுக்க அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க:கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - பள்ளிக்கல்வித்துறை

ABOUT THE AUTHOR

...view details