தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்காளர்களுக்கு விவிபாட் கருவி குறித்து விழிப்புணர்வு - Vivipat process description

மயிலாடுதுறை: வாக்காளர்கள் தாங்கள் அளித்த வாக்கினை உறுதி செய்யும் விவிபாட் கருவி குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விவிபாட் கருவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
விவிபாட் கருவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

By

Published : Mar 6, 2021, 4:07 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வட்டாட்சியர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. இதில், வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் விவிபாட் கருவியின் பயன்பாடு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

விவிபாட் கருவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதிதாக வாக்களிக்கும் வாக்காளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அலுவலர்கள், "வாக்காளர்கள் அனைவரும் ஏப்ரல் 6ஆம் தேதி தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்" என கேட்டுக் கொண்டனர்.

இதையும் படிங்க :கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டி!

ABOUT THE AUTHOR

...view details