தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் சார்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி - நாகை மாவட்டச் செய்திகள்

மயிலாடுதுறை செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வுப் பரப்புரை இன்று நடைபெற்றது.

sembanur-regulated-outlet
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் சார்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

By

Published : Dec 30, 2020, 6:27 AM IST

நாகை:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அரசு வேளாண் விற்பனை, வேளாண் வணிகத் துறை சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வுப் பரப்புரை நடைபெற்றது.

நாகை மாவட்ட வேளாண் விற்பனை குழுச் செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில், விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருள்களை செம்பனூர்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு எடுத்துவர வேண்டும் என்றும் மறைமுக ஏலத்தில் கலந்துகொண்டு அதிக லாபத்திற்கு விற்பனை செய்து பயன்பெற வேண்டும் என்றும் ஒலிப்பெருக்கி மூலம் பரப்புரை செய்யப்பட்டது.

தொடர்ந்து செம்பனார்கோவில், கீழமாத்தூர், மேம்மாத்தூர், நெடுவாசல், இலுப்பூர் உத்திரங்குடி, எடுத்துக்கட்டி உள்ளிட்ட செம்பனார்கோவில் சுற்றுவட்டார ஊராட்சிகளில் துண்டுப்பிரசுரங்கள் மூலம் பரப்புரை செய்யப்பட்டது. இதில், அரசு வேளாண் விற்பனைக் குழு அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:38ஆவது மாவட்டமாக உதயமான மயிலாடுதுறை: மக்கள் மகிழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details