நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜூன் 5) நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில், நாகை நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆய்வாளர் பெரியசாமி மீனவர்போல் வேடம் அணிந்து பொது மக்கள் மத்தியில் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
முகக்கவசம் (மாஸ்க்) அணியாமல் வலை பின்னிக் கொண்டு இருக்கும், மீனவரை கரோனா தொற்று எவ்வாறு பரவி வருகிறது என்றும், 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்வதும் போன்ற காட்சிகளைக் காவல் ஆய்வாளர் பெரியசாமி தத்துரூபமாக நடித்து மீனவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, நோய் தொற்று பரவும் இக்கட்டான சூழ்நிலையில் தன் உயிரை பணயம் வைத்து பொதுமக்களுக்காக போராடி வரும் முன் களப்பணியாளர்களான மருத்துவர், காவல்துறையினர், துய்மைப் பணியாளர் ஆகியோரை கவுரவிக்கும் விதமாக காவல் ஆய்வாளர் பெரியசாமி அவர்களுக்கு பாதபூஜை செய்தார்.
இதையடுத்து, காக்கி உடையில் கம்பீரமாக பணியாற்றும் காவல் துறையினர் மத்தியில், முன் களப் பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து மீனவர்கள் மத்தியில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய நாகை காவல் ஆய்வாளர் பெரியசாமியின் செயல் அப்பகுதி மக்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து