ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தமிழ்நாடு அரசு 2019 ஆம் ஆண்டு முதல் தடை விதித்தது. இதற்கு மக்களிடம் குறைவான ஒத்துழைப்பு கிடைப்பதால் தான் தற்போது வரை பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முடியவில்லை.
இதற்கு மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என தன்னார்வலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் பல மாவட்டங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வாகனம் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என காணொலிக் காட்சி வாயிலாக வாகனத்தில் வீடியோ ஒளிபரப்பட்டது.
இந்தப் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் லலிதா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:Besant nagar beach: ஒரே நாளில் 75 டன் திடக்கழிவுகள் அகற்றம்