தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தைகள் பாதுகாப்பிற்காக நாகையில் விழித்திரு திட்டம் தொடங்கப்பட்டது - விழித்திரு என்ற பாதுகாப்பு அமைப்பை

நாகை : அனைத்து பள்ளிகளிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் மாணவர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு விழித்திரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பிற்காக நாகையில் விழித்திரு திட்டம் தொடங்கப்பட்டது
குழந்தைகள் பாதுகாப்பிற்காக நாகையில் விழித்திரு திட்டம் தொடங்கப்பட்டது

By

Published : Feb 14, 2020, 1:13 PM IST

நாகை : குழந்தைகளுக்கான ஆரோக்கியமான தொடுதல் மற்றும் ஆரோக்கியமற்ற தொடுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகை நகராட்சி மகளிர் மேல்நிலை பள்ளியில் இன்று நடைபெற்றது.

அம்மாவட்ட ஆட்சியர் பிரவின் பி நாயர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், பெண் காவலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அப்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்காக விழித்திரு என்ற பாதுகாப்பு அமைப்பை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் பொருத்தும் பணிகளும் இன்று தொடங்கப்பட்டன.

Awakening program in launched for the protection of children

இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை புகார் பெட்டியில் போடலாம். மன அழுத்தம் போன்றவைகளை எழுதியும் புகார் பெட்டியில் போட குழந்தைகள் தைரியமாக முன் வரவேண்டும் என்றார்.

இதையும் படிங்க :ஒரு ரூபாய்க்கு விமான டிக்கெட் கொடுத்து புரட்சி செய்தவர் கோபிநாத்'- நடிகர் சூர்யா

ABOUT THE AUTHOR

...view details