மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற்ற ஆவணி மூலத்திருநாள் விழாவில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டார்.
அந்த விழாவில் பேசிய தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், "இறைவன் தொழிலாளியாக வந்து கூலி வாங்கிக்கொண்டு, வேலை சரியாகச் செய்யவில்லை என்றால் தண்டனை கிடைக்க வேண்டுமென்ற திருவிளையாடலை நிகழ்த்திய ஆவணி மூலத்திருநாளே தொழிலாளர் நாளாகக் கொண்டாடப்பட வேண்டிய நாள்.
அருணை பாலறாவாயனுக்கு 'தருமையாதீனப்புலவர்' விருது
அரசு மே மாதங்களில்தான் தொழிலாளர் நாள் கொண்டாடுகிறது. உண்மையிலேயே தொழிலாளர் நாள் கொண்டாடப்பட வேண்டியது ஆவணி மூலத் திருநாளில்தான். சுவாமி எல்லாருடைய வேலைகளையும் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு அனுக்கிரகம் செய்தார்" என்று கூறினார்.
தருமபுரம் ஆதீனத்தில் ஆவணி மூலத்திருநாள் விழா 1951ஆம் ஆண்டுமுதல் ஆதீன கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழாவாகவும் - தமிழ்மொழி, சமயம், தத்துவம், இலக்கியம், கலை முதலியவற்றில் புலமைபெற்ற அறிஞர் ஒருவருக்கு பட்டம் வழங்கி பாராட்டும் விழாவாகவும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிறது.