தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Viral Audio: விசாரணைக்கு அழைத்த காவலர்; மிரட்டல் விடுத்த ரவுடி... - சீர்காழியில் காவலரை மிரட்டிய ரவுடி

சீர்காழி அருகே வழக்கு விசாரணைக்காக அழைத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த ரவுடியின் குரல் பதிவு வெளியாகியுள்ளது.

phone conversation of rowdy threatens police  rowdy threatens police  viral audio of rowdy threatens police  rowdy threatens police in Sirkali  காவலரை மிரட்டிய ரவுடி  காவலரை மிரட்டிய ரவுடியின் குரல் பதிவு  ரவுடி கொலை மிரட்டல்  சீர்காழியில் காவலரை மிரட்டிய ரவுடி  காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்
மிரட்டல் விடுத்த ரவுடி

By

Published : Mar 21, 2022, 9:53 AM IST

மயிலாடுதுறை:சீர்காழி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் அர்ஜூனன். இவரிடம் புத்தூரை சேர்ந்த மணிமாறன் என்பவர், தன்னை வழிமறித்து அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த செய்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளரர் அர்ஜுனன், மணிமாறன் மற்றும் எதிர்தரப்பை சேர்ந்த வினோத் என்பவரை காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், வினோத்திற்கு ஆதரவாக தைக்கால் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

குடும்பத்தோடு காலி

இதனையடுத்து, அர்ஜுனன், ரவுடி செந்திலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கு விசாரணைக்காக அழைத்துள்ளார். அப்போது தொலைபேசியில் ஆய்வாளரை ஆபாசமாக பேசிய செந்தில் கடுஞ்சொற்களால் திட்டி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

காவரை மிரட்டிய ரவுடி

மேலும் “தன்னை இனிமேல் விசாரித்தால், அரை மணி நேரத்தில் குடும்பத்தோடு காலி செய்து விடுவேன்” என கடுமையாக பேசி மிரட்டியுள்ளார். இந்த ஆடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

இந்நிலையில், ரவுடி செந்தில் மீது, காவல் உதவி ஆய்வாளர் அர்ஜுனன், சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைவறைவான ரவுடி செந்திலை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பல்சர் பைக்கில் வந்த இளைஞர் மூதாட்டி மீது பலமாக மோதி விபத்து: பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details