தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டை ஆக்கிரமிக்க முயற்சி - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த 85 வயது மூதாட்டி - Grandmother complained in the District Collector's Office

மயிலாடுதுறை அருகே வீட்டை ஆக்கிரமிக்க முயல்வதாக ஊன்றுகோலுடன் வந்த 85 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நான்கு கால் ஊன்றுகோல் உதவியுடன் 85 வயதில் அலைந்து திரியும் மூதாட்டி
வீட்டை ஆக்ரமிக்க முயல்வதாக அரசு அலுவலகங்களை நான்கு கால் ஊன்றுகோல் உதவியுடன் 85 வயதில் அலைந்து திரியும் மூதாட்டி

By

Published : May 10, 2022, 9:17 AM IST

Updated : May 10, 2022, 10:14 AM IST

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் தாலுக்கா வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள். 85 வயதான இந்த மூதாட்டியின் வீட்டை அக்கம்பக்கத்தில் உள்ள சிலர் அபகரிக்க முயல்வதாக கூறப்படுகிறது. இவரது கணவர் மற்றும் மகன் இறந்துவிட இவரது இரு மகள்கள் திருமணமாகி கும்பகோணம் அருகே வசித்து வருகின்றனர்.

இவரது கணவர் பெயரிலான சுமார் 1200 சதுர அடியில் சிறிய கூரை வீட்டில் வசித்து வந்த இடத்தை அருகில் உள்ள சிலர் ஆக்ரமிக்க முயல்வதாகவும், தன்மீது தாக்குதல் நடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். முதுமை காரணமாக நடக்க முடியாத நிலையிலும் கால்கள் ஒடிந்து அதற்கு வைத்தியம் பார்த்து, நாற்காலி போன்ற ஊன்றுகோல் உதவியுடன் தட்டுத்தடுமாறி வாரம்தோறும் திங்கட்கிழமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்து வருகிறார்.

அவரை தாலுகா அலுவலகம் சென்று பார்க்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.ஆனால் தாலுக்கா அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் புகார் தெரிவித்துள்ளார், எங்குமே நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்று மயிலாடுதுறையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்து புகார் அளித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.பின்னர் அதிகாரிகள் திருபுவனத்தில் உள்ள அரவது மகள் வழி பேத்தி அமுதாவை வரசெய்து அவருடன் செல்ல அறிவுறுத்திய நிலையில், தான் இருக்கும் இடத்திலேயே பிரச்னை இல்லாமல் வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வீட்டை ஆக்கிரமிக்க முயற்சி - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த 85 வயது மூதாட்

மேலும் கோவிந்தம்மாளிடம் தகராறு செய்பவர்கள் மீது குத்தாலம் காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும், பாட்டி தன் பூர்வீக இடத்தில் வசிக்க ஆவண செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கோவிந்தம்மாளின் பேத்தி அமுதாவும் தன் பாட்டி குடியிருக்க குடிசை அமைத்துத்தருகிறோம் என்று உத்தரவாதம் அளித்து அழைத்துச் சென்றார்.

இதையும் படிங்க:வீடுகளை இடிப்பதா என அரசை கண்டிக்கும் கூட்டணி கட்சிகள்.. மார்க்சிஸ்ட் கடும் கண்டனம்..

Last Updated : May 10, 2022, 10:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details