தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் நிலையத்தை முற்றுகையிட சென்ற விசிக! - காவல் நிலையம் முற்றுகை

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே மணல்மேடு காவல்நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட முயற்சித்தனர்.

விடுதலை சிறுத்தை கட்சியினர்
விடுதலை சிறுத்தை கட்சியினர்

By

Published : Jul 11, 2020, 2:32 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே நாராயணமங்கலம் கிராமத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆதிதிராவிட மக்களுக்கும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டள்ளது.
இது தொடர்பாக இருதரப்பினரும் மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதில் ஆதிதிராவிட சமூகத்தின் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவுசெய்து சிலரை கைது செய்து காவலில் அடைத்தனர். மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது சாதிய கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்து தேடிவருகின்றனர்.
இதில் ஒருசாரர் மீது மட்டும் கைது நடவடிக்கை எடுத்து மற்ற தரப்பினர் மீது கைது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து மணல்மேடு காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபட்டனர்.
முன்னாள் மாவட்ட தலைவர் ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 750க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்று காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.
இவர்களிடம் காவல் துணை கண்காணிப்பளர் அண்ணாதுரை தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில் இரண்டு தினங்களுக்குள் குற்றவாளிகளைக் கைது செய்துவிடுவதாக காவல்துறையினர் உத்தரவாதம் அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு விடுதலை சிறுத்தை கட்சியினர் கலைந்து சென்றனர்.
இதனால் 1 மணிநேரம் மணல்மேடு - பந்தநல்லூர் சாலை முடக்கப்பட்டது. கரோனா வைரஸ் காரணமாக 144 உத்தரவு அமலில் உள்ள நிலையில் 750க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details