நாகப்பட்டினம்: மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கீச்சாங்குப்பம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் கோடியக்கரை தென் கிழக்கே 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இரண்டு அதிவேக படகுகளில் 9 இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்துள்ளனர்.
கீச்சாங்குப்பம் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகை சுற்றி வளைத்த கொள்ளையர்கள், அதில் இருந்த கிருஷ்ணராஜ், வேலு, முத்துக்குமார், ரவீந்தர் ஆகிய மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.